சென்னை: அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் அல்லாத ஊழியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப் பிய சுற்றறிக்கை:

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அடிப்படையில் உத்தேசமாக ஆசிரியரல்லாத பணியிடங்கள் மாவட்ட வாரியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்விவரங்களை சரிபார்த்து இறுதிசெய்ய வேண்டும். அதன்படி பள்ளிகளில் உபரியாக உள்ள உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியாளர்களைக் கண்டறிந்து அருகே தேவை உள்ள மற்றொரு பள்ளிக்கு பணிநிரவல் செய்ய வேண்டும்.

ஒரு சில மாவட்டங்களில் பணிநிரவல் அல்லது உபரி பணியிடங்களை பகிர்ந்தளித்த பின்னும் கூடுதல் தேவை இருந்தால் அந்த பள்ளிவிவரங்களை மாவட்ட வாரியாக தொகுத்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த பணிகள் சார்ந்த பதிவுகளை ‘எமிஸ்’ தளம்வழியாக முழுமையாக பதிவேற்ற வேண்டும். அதன் விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Source link