வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-‘இந்த நுாற்றாண்டு இறுதியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அதிக வெப்ப நிலை என்ற பாதிப்பு மூன்று மடங்கு வரை அதிகரிக்கும்’ என, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

latest tamil news

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை சுற்றுச் சூழல் ஆராய்ச்சித் துறை விஞ்ஞானி லுாக்காஸ் வர்காஸ் ஜெப்படெல்லோ கூறியதாவது:உலகின் வெப்ப மாறுபாடு குறித்து தீவிர ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மிகத் தீவிர ஆபத்து விளைவிக்கக் கூடிய வெப்ப குறியீடான 124 டிகிரி பாரன்ஹீட் வருங்காலத்தில் பதிவாக வாய்ப்புஉள்ளது. கடந்த 1979- – 1998- வரை உலக நாடுகளில் பதிவான வெப்ப நிலையை அடிப்படையாக வைத்து, 2050 மற்றும் 2100 ஆகிய ஆண்டுகளில் எவ்வாறு பதிவாகும் என ஆராயப்பட்டது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1979- – 1998 -வரை நான்கு முறை தான் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ஆனால், இந்த நுாற்றாண்டின் இறுதியில் ஆண்டுக்கு 11 முறை அதீத வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.இந்தியா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகளில், இந்த நுாற்றாண்டின் இறுதியில் இந்த அதீத வெப்ப நிலையானது ஆண்டுக்கு 1 முதல் நான்கு வாரங்கள் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இதில் மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். பருவ கால மாற்றத்தின் நான்கு விளைவுகளில் வெப்ப அலைகள் முக்கிய ஒன்று. கடல் நீர்மட்டம் உயருதல், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உயிரினங்களின் சூழலியல் மாற்றம் ஆகியவற்றால் வெப்பநிலை உயருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

மற்றொரு விஞ்ஞானி ஜெனிபர் பிரான்சிஸ் கூறியதாவது:பேராசிரியர் ஜெப்படெல்லாவின் கணிப்புகள் முற்றிலும் நம்பத்தகுந்தவை. எதிர்கால சந்ததியினர் கடும் பாதிப்புகளை சந்திக்க வேண்டும். பருவகால மாற்றங்கள் பற்றி உலக நாடுகள் கவலை கொண்டாலும் பல நாடுகள் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தயாராக இல்லை என்பது வேதனையானது.

இந்தியா உட்பட வளர்ந்து வரும் நாடுகள் பருவ கால மாறுபாடு குறித்து பல மாநாடுகளில் சுட்டிக் காட்டியுள்ளன. பொதுமக்களும் வெப்ப நிலையை கட்டுப்படுத்தக் கூடியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link