வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : அமெரிக்காவிடம் இருந்து நம் ராணுவத்துக்கு 30, ‘எம்க்யூ9பி பிரிடேடர் ட்ரோன்கள்’ வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, எல்லைப் பகுதி கண்காணிப்பில் நம் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக எல்லை கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கண்காணிப்பு மட்டுமின்றி, தாக்குதலும் நடத்தும் திறன் உடைய, ‘எம்க்யூ9பி பிரிடேடர்’ என்ற ட்ரோனை அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் முயற்சியை நம் கடற்படை மேற்கொண்டது. ராணுவம், விமானம் மற்றும் கடற்படைக்கு சேர்த்து மொத்தம் 30 ட்ரோன்களை, 23 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு வாங்க திட்டமிடப்பட்டது.

latest tamil news

இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்க ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் அடாமிக்ஸ் நிராகரித்ததாக கூறப்பட்டது. இந்த தகவலை அதிகாரிகள் மறுத்து உள்ளனர். ”எம்க்யூ9பி பிரிடேடர் ட்ரோன்களை வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா நடத்தி வரும் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என, ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி டாக்டர் விவேக் லல் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் காபூலில் அல் – குவைதா தலைவர் அய்மன் அல்ஜவாஹிரியை சமீபத்தில் கொல்ல அமெரிக்கா பயன்படுத்திய, ‘எம்க்யூ9 ரீப்பர்’ என்ற ட்ரோனின் மற்றொரு வகை தான், எம்க்யூ9பி என அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link