கோல்கட்டா: ”மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தைரியம் இருந்தால் நான் தவறு செய்ததாக நிரூபித்து என்னை சிறையில் அடைக்கட்டும்,” என, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. முதல்வரின் உறவினரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜியிடம் நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஏழு மணி நேரம் விசாரணை நடந்தது.

அதன் பின் அவர் கூறியதாவது: இந்தியா – பாக்., கிரிக்கெட் போட்டியின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேசிய கொடியை பெற்றுக் கொள்ள மறுத்தது தொடர்பாக நான் விமர்சித்தேன். இதை பொறுக்க முடியாமல் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., வாயிலாக என்னை மிரட்டுகின்றனர். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். தேவைப்பட்டால் 30 முறைகூட விசாரணைக்கு ஆஜராக தயார். பா.ஜ.,விடம் மட்டும் அடிபணிய மாட்டேன். அமித் ஷாவுக்கு தைரியம் இருந்தால் நான் தவறு செய்ததாக நிரூபித்து என்னை சிறையில் அடைக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link