“எனது அன்றாட பணியில் தண்டோரா போடுவதும் ஒன்று. அதற்கு கூடுதல் சம்பளம் கிடையாது”, "நாங்கள் செய்யும் தூய்மைப் பணிகளுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கொடுப்பதில்லை. அதனை அரசாங்கம் தந்தால் நல்லது", “50 வருடங்களாக நான் தண்டோரா அடித்து வருகிறேன். இதான் என் முதன்மைத் தொழில்” – கிராமங்களில் தண்டோரா அடித்து வருபவர்கள் பகிரந்தவை.
"தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்” என தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியாளர்களை கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தார்.