Connect with us

சினிமா

அண்ணாத்த படத்துக்கு முன் சிவா இயக்கத்தில் பிரபல ஹீரோ..

அஜீத்குமார் நடித்த விஸ்வாசம், வீரம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. அதற்கு முன்பாக அவர் கார்த்தி தமன்னா நடித்த சிறுத்தை என்ற படத்தை இயக்கினார். கடந்த 2019ம் ஆண்டு சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39 படமாக உருவாகவிருந்தது. எதிர்பாராத விதமாக விஸ்வாசம் படம் சூப்பர் ஹிட் ஆனதில் சிவாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது.

இதையடுத்து அவர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார். சூர்யா படம் தள்ளிவைக்கப் பட்டது.அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கிக் கடந்த தீபாவளி தினத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டது. அதற்கேற்ப படப்பிடிப்பும் தொடங்கியது. திடீரென்று கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பு தடைப்பட்டது. 6 மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்புகளைத் தொடங்க அரசு அனுமதி அளித்தது.

ஆனாலும் கொரோனா அபாயம் குறைய வேண்டும் என்று ரஜினி படக் குழு காத்திருந்தது.பின்னர் கடந்த டிசம்பர் 13ம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஷூட்டிங்கில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த்துக்கும் அடுத்த நாளில் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார். தற்போது அண்ணாத்த படப்பிடிப்பைச் சட்ட சபை தேர்தல் முடிந்த பிறகு தொடங்கலாம் என ரஜினி தெரிவித்திருப்பதையடுத்து ஏப்ரலுக்கு பிறகே அதன் படப் பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இந்நிலையில் தான் சிவா புதிய படத்தை கையிலெடுக்க உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு தொடங்குவதாக இருந்த சூர்யாவின் படத்தை இயக்க தயாராகிறார் சிவா. இதற்கிடையில் சூர்யா, கவுதம் மேனன் இயக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மணிரத்னம் தயாரிக்கிறார்.

Source link

அரசியல்

நடிகர் கருணாசுக்கு வன்னியர் சங்க மா.செ எச்சரிக்கை!

vaithi

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசம் தவறாக பயன்படுத்தப்பட்டது வன்னியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் கருணாஸ் சூரியாவிர்க்கு ஆதரவாகவும், வன்னியர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்க மாநில செயலாளர் அவரது முகநூல் பக்கத்தில் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு,

பதிலறிக்கை அல்ல
எச்சரிக்கை:
—–
லொடுக்குப்பாண்டி  கருணாஸ் எல்லாம் புத்தி சொல்ல வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் தள்ளப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  .

பாட்டாளி மக்கள் கட்சியை கண்டிப்பதற்கு கருணாஸ் போன்றவர்களுக்கு துளியளவும் அருகதை இல்லை.

ஒரு நாளைக்கு தன்னோட சாதி கட்சிக்காரங்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கு சரக்கு வாங்கி கொடுப்பதாக மேடையில் பேசி, தமிழ் சமூக இளைஞர்களை போதையின் பாதையில்  இட்டு செல்லும் நான்காம் தர அரசியல்வாதி நீ.மன்னார்குடி தயவில் எம்எல்ஏ ஆகி, அதற்கு நன்றி கடனாக கூவத்தூரில் கருணாஸ் செய்த கலைச் சேவைகளை தமிழக மக்களும் ஊடகங்களும் இவ்வுலகமும் அறிந்தவைதானே.எங்கள் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும், தன் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் குடிக்கக்கூடாது என்பதற்காக 40 ஆண்டுகாலமாக மதுவுக்கு எதிராக போராடி வருவதோடு,சட்ட போராட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 90,000 மதுக்கடைகளையும், தமிழ்நாட்டில் 3300 மதுக்கடைகளையும் மூடியது வரலாறு!!

இப்படியிருக்க சரக்கு வாங்கி கொடுப்பதை சாதனை போல பேசுவோரும், ஊற்றி கொடுத்து உற்சாகப்படுத்துவோரும் போதனை சொல்லி அறிக்கை விடுவதைப் பார்த்தால், தமிழக அரசியலின் நிலை வேடிக்கையாக உள்ளது.ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியினை நீக்கியும் பாமகவினர் வம்பிழுப்பதாக அறிக்கையில் கூறியிருக்கிறீர்கள். படக்குழுவினர் தவறை உணர்ந்து, வன்னியர்களது புனித சின்னமான அக்னி கலசத்தை கொலைகார எஸ்ஐ வீட்டு காட்சியிலிருந்து நீக்கியதாக இருந்தால், தவறு செய்தவர்கள் யார் மனதை புண்படுத்தினார்களோ அவர்களிடம் மன்னிப்பு கேட்பதும், காட்சிப்படுத்தியதன் காரணத்தை விளக்குவதும்தான் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்திருக்கும்.

இதனை குறிப்பிட்டுதான் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் 9 கேள்விகளை கேட்டு படத்தின் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு நாகரீகமான கடிதம் ஒன்று எழுதினார்கள்.அதற்கு தக்க பதில் அளித்திருக்க வேண்டிய சூர்யா, ஒரு கேள்விக்காவது உரிய விளக்கம் கொடுத்தாரா என்றால் இல்லவே இல்லை. அதை விடுத்து அவர்களுக்கு மட்டுமே ஏகோபித்த மக்களின் ஆதரவு இருப்பது போல எகத்தாளமாக பதில் தருவது என்ன ரகம்.செய்யாத குற்றத்திற்காக, சம்மந்தமில்லாத வன்னிய சமூகத்தை கொடூர கொலைகார சமூகமாக சித்தரித்த பழிகார நடிகன் சூர்யாவிற்கு இத்தனை ஆதரவு இருப்பதாக திரைக்கூத்தாடிகள் காட்டியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே இக்கொலைக்கு நீதி கிடைக்க ராசாக்கண்ணு குடும்பத்துக்கு ஆதரவாக அவ்வூரைச் சேர்ந்த வன்னிய சமூகம் தான் துணை நின்றதென்பது வரலாறு.அதை அறிந்துகொண்ட பிறகும் வரலாற்றை திரித்து ஜெய்பீம் படக் கும்பலால் பழி சுமத்தப்பட்டு மனம் நொந்து நிற்கும் மூன்று கோடி வன்னிய சொந்தங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பதை விரைவில் இந்த அடாவடி திரையுலக அறிக்கை கும்பல் உணரும்.அதை வன்னியர் சங்கம் உணர்த்தும். 

பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலியை 1 % கூட உணராதஇதுபோன்ற பலரின் வெற்று அறிக்கைகளை பலவற்றைப் பார்த்துதான்  40 ஆண்டுகாலம் இந்த இயக்கம் சமூகப்பணி ஆற்றி வருகிறது.லொடுக்குப் பாண்டியே இத்துடன் நிறுத்திக்கொள்!!இது உமக்கான பதிலறிக்கை மட்டுமல்ல.கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் கூச்சலிடும் கூத்தாடிகள் அனைவருக்குமானதுதான்..இது அறிக்கையல்ல.எச்சரிக்கை!!.

Continue Reading

சினிமா

நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'பம்மல் கே சம்பந்தம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி (98), கரோனா தொற்றிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மலையாளத் திரைப்படங்களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர். இவரது மருமகன் கைதப்ரம் தாமோதரன் பாடலாசிரியராக உள்ளார்.

Source link

Continue Reading

சினிமா

76வது வயதில் நடிகரானார் மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் 98வது வயதில் கொரோனா பாதித்து மரணம்

மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா பாதித்து 98வது வயதில் மரணமடைந்தார். 76 வயதில் தற்செயலாக நடிகரான இவர், சந்திரமுகி, பம்மல் கே சம்பந்தம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மலையாள சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி. இவரது மாமனார் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி (98). இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பையனூர் ஆகும். இந்நிலையில் மலையாள சினிமாவின் முன்னணி டைரக்டரான ஜெயராஜ், கடந்த 26 வருடங்களுக்கு முன் தேசாடனம் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் வயதான ஒரு கேரக்டருக்கு தகுந்த நடிகரை ஜெயராஜ் தேடிக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் அந்தப் படத்தில் பாடல் எழுதுவதற்காக அவர் கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரியின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டில் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி இருந்தார். அவரை பார்த்தவுடன் ஜெயராஜ் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார். அப்போது உண்ணிகிருஷ்ணனுக்கு வயது 76. இதன்பிறகு ராப்பகல், கல்யாண ராமன், ஒராள் மாத்ரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்த இவர், தமிழில் ரஜினிகாந்துடன் சந்திரமுகி, கமலுடன் பம்மல் கே சம்பந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உட்பட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கண்ணூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறிய அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பையனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source link

Continue Reading

Trending