அசோக் லேலண்ட் நிறுவனம், ஏவிடிஆர் 4825 என்ற டிப்பர் லாரிகளை அறிமுகம் செய்துள்ளது. 19 டன்கள் முதல் 55 டன்கள் வரையிலான சுமை திறன்களில் கிடைக்கும். கேபின் மற்றும் டிப்பரின் சரக்கு ஏற்றும் பகுதி கொண்ட இதில், பயன்பாட்டுக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். இதில் 250எச்பி திறன் கொண்ட எச் வரிசை 4வி 6 சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இதில் ஐ-ஜென் 6 தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த தொழில்நுட்பம் இன்ஜின் திறனை மேம்படுத்த உதவுகிறது. அனைத்து வகையான சாலைகளிலும் எளிதாக கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, சாலை திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான தளவாட பொருட்களை ஏற்றிச் செல்ல இது ஏதுவாக இருக்கும். 18, 29 மற்றும் 23 கியூபிக் மீட்டர் பாக்ஸ் பாடி வேரியண்ட்களில் கிடைக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source link